கதை
  விதியின் விளையாட்டு
  அம்மா எனக்கொருத் தோழி
  சிறகு தேடி
கவிதை
  நட்பு வேண்டும்
  உழவன்
  பாடு நெஞ்சமே
கட்டுரை
  இயற்கையின் பேரழகு கொஞ்சும் ஷில்லாங்
சிரிக்க சிந்திக்க 
  ஜோக்ஸ் 
நேர்க்காணல்
  திசைகள் மாலன்
நட்சத்திர ஆல்பம்
திரையோவியம்
காலண்டர் 2006
Difficulty reading Tamil Text?
எங்களுடன் தொடர்புகளுக்கு...
தமிழில் சுலபமாக எழுத! 
யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்ய
 

 

ஜோக்ஸ்


 

நினைவாலயம் …

"மும்தாஜுக்காக ஷாஜகான் தாஜ்மஹால் கட்டின மாதிரி
உனக்காக நான் ஒரு மாளிகை கட்டுறேன் டார்லிங்
" 

" இந்தக் கதையெல்லாம் வேணாம்.
முதல என் கழுத்துல தாலிய கட்டுங்க
"

- ஆரூர் சரோ

***        ***        ***

அன்புக்கொஞ்சல் 

"நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல
கொழந்தைகிட்ட  கொஞ்சிகிட்டிருக்கிறாரே ? 
" 

"குழந்தைகிட்ட இல்ல…
என்கிட்டதான் அப்படி நடந்துக்கிறாரு 
" 

"அதுக்கு ஏண்டி சமையல் ரூம்தான்  கிடச்சதா…
பெட் ரூம் என்னாச்சு ?
" 

"என்னது ?
சமையல் ரூமா ? - அங்கே வேலைக்காரில்ல தூங்கினா… "

 - க. இளஞ்சேட்சென்னி

 ***        ***        ***

வர்ணனை 

அன்பே !
உன்னை நிலவென்றும், மலரென்றும், நதியென்றும்,
ஒருபோதும் வர்ணிக்க மாட்டேன் !

ஏன் தெரியுமா ? 

இவைகளெல்லாம் , அனைவருக்கும் சொந்தம்.
 ஆனால், நீ எனக்கு மட்டுந்தான் சொந்தம்.

 - ரா.சுந்தரமூர்த்தி

***        ***        ***

அக்கறை 

ஒரு பூங்காவில் வயதான ஒருத்தர் உட்கார்ந்து அழுது புலம்பிக்கிட்டு இருந்தார்.

அவரு கிட்ட போயி "என்னங்க விஷயம்"ன்னு கேட்டேன்.

"போன மாசம் தான் ரிட்டயரு ஆனேன். ஏகப்பட காசு வந்துச்சி நெறய சொத்து, காரு இருக்கு, அருமையான மனைவி, புள்ளைங்க எல்லாம் இருக்காங்க, வேளாவேளைக்கு அருமையான சாப்பாடு போட்டு என்னை அருமையா கவனிச்சுக்குவாங்க"ன்னாரு.

"அப்றம் ஏங்க இங்க ஒக்காந்து அழுதுகிட்டு இருக்கீங்க"ன்னு கேட்டேன்

"என் வீட்டுக்கு போற வழி மறந்து போயிட்டேன்"ன்னாரு

***        ***        ***

விமர்சனம்

ஒரு மருத்துவர் மனநோயாளியைப் பரிசோதிச்சிக்கிட்டு இருந்தாரு.

ஒரு வட்டம் வரைஞ்சி "அது என்ன"ன்னாரு.

அதுக்கு அவன் "ஒரு பொண்ணு துணியில்லாம இருக்கா"ன்னான்.

அப்புறம் அவர் ஒரு சதுரம் வரைஞ்சி "அது என்ன"ன்னாரு.

அதுக்கு அவன் "ஒரு பொண்ணு துணியில்லாம படுக்கையில படுத்திருக்கா"ன்னான்.

அப்புறம் அவர் ஒரு முக்கோணம் வரைஞ்சி "அது என்ன"ன்னாரு

அதுக்கு அவன் "ஒரு பொண்ணு துணியில்லாம படுக்கையில ஒரு ஆளோட படுத்திருக்கா"ன்னான்.

அதிர்ந்து போன அவர் "ச்சே! என்ன ஆளுய்யா நீ... இவ்வளவு அசிங்கமா சிந்திக்கறே"ன்னாரு

உடனே அவன் சொன்னான் "நீ மட்டும் என்ன.. நானும் அப்போலேர்ந்து பார்த்துக்கிட்டு இருக்க்கேன் அசிங்கம் அசிங்கமா வரைஞ்சிக்கிட்டு இருக்கே".

***        ***        ***

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above