கதை
  விதியின் விளையாட்டு
  அம்மா எனக்கொருத் தோழி
  சிறகு தேடி
கவிதை
  நட்பு வேண்டும்
  உழவன்
  பாடு நெஞ்சமே
கட்டுரை
  இயற்கையின் பேரழகு கொஞ்சும் ஷில்லாங்
சிரிக்க சிந்திக்க 
  ஜோக்ஸ் 
நேர்க்காணல்
  திசைகள் மாலன்
நட்சத்திர ஆல்பம்
திரையோவியம்
காலண்டர் 2006
Difficulty reading Tamil Text?
எங்களுடன் தொடர்புகளுக்கு...
தமிழில் சுலபமாக எழுத! 
யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்ய
 

 

உழவன்

அருணா செல்வம்

உறங்கி நிலமகளை ஏர் கொண்டு கீறி
உறவாட வைத்தவன் உழவன்! - அவன்
உறவாடி மகிழ்ந்ததால் உண்டான செல்வத்தைக்
கொண்டாடி மகிழ்பவன் மனிதன்!
        

சேறு மிதித்தால் சோறு கிடைக்கும்
உலகுக்கு உரைத்தவன் உழவன்! - அந்த
உண்மை அறிந்தே உள்ளம் மகிழ்ந்தே
வணங்கி நிற்பவன் தமிழன்!
           

எழுந்து ஒளிரும் ஆதவன் அருளைத்
தொழுது வாழ்பவன் உழவன்! - அவன்
உழுது விளைத்த உணவைப் பெற்றே

உலகில் வாழ்பவன் மனிதன்!
           

மழைநீர் இலையெனில் உடல்நீர் சொரிந்து
உழைத்துக் களைத்தவன் உழவன்! - அவன்
மனம்போல் வாழ வளங்கள் சூழ
வாழ்த்தி மகிழ்பவன் தமிழன்
!

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above