ஆல்பத்தில் சிரிக்கும்
உறவு முகங்கள்
ஆபத்தில் உதவிகேட்க
அவசரமாய் இறுகும்
மருந்து தடவி
ஆறாத காயம்
தந்தையின்
கண்ணீர் துளிபட
காணாமல் போகும்
ஆலய சிலை முகத்தில்
அகப்படாத கருணை
அடுப்படியில் வேகும்
அன்னையின் கண்களில்
பள்ளி ஆசிரியர்
பயிற்றுவிக்காதது
அனுபவ ஆசானால்
ஆழமாய் பதியும்
பே சேனல் தராத
பிரமிப்பை வழங்கும்
பால்நிலா பிடிக்க
பனித்துளி விரித்த
பசிய புல்வெளி
உறவு முகங்கள்
ஆபத்தில் உதவிகேட்க
அவசரமாய் இறுகும்
மருந்து தடவி
ஆறாத காயம்
தந்தையின்
கண்ணீர் துளிபட
காணாமல் போகும்
ஆலய சிலை முகத்தில்
அகப்படாத கருணை
அடுப்படியில் வேகும்
அன்னையின் கண்களில்
பள்ளி ஆசிரியர்
பயிற்றுவிக்காதது
அனுபவ ஆசானால்
ஆழமாய் பதியும்
பே சேனல் தராத
பிரமிப்பை வழங்கும்
பால்நிலா பிடிக்க
பனித்துளி விரித்த
பசிய புல்வெளி