நுழைவாயில்

கதை
  அன்பின் பரிசு
  வெள்ளை இருட்டில்...
  தாய்ப்பால்
கவிதை
  பா வேந்தனே மீண்டும் வா
  மாறாத எழில் கண்டேன்
  உறவு வாசம்
கட்டுரை
  மதமற்ற எண்ணங்களின் மாற்றம்
நேர்க்காணல்
  கலை கந்தசாமி
புதிய வரவு
  அறிவுமதியின் தை 
நட்சத்திர ஆல்பம்
திரையோவியம்
காலண்டர் 2006
Difficulty reading Tamil Text?
எங்களுடன் தொடர்புகளுக்கு...
தமிழில் சுலபமாக எழுத! 
யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்ய
 

 

 

 
பாவேந்தனே மீண்டும் வா வேந்தனே
- இமயம் வஜ்ரவேல்

மூவேந்தர் கண்டதமிழ் மொழியின் பிள்ளை!
      மூடத்தின் முதல்எதிரி! அறிவின் எல்லை
பாவேந்தன் இவன்தானே கவிதை தன்னைப்
      படைக்கலமாய் மாற்றியொரு புரட்சி செய்தான்!
மூடநெறிப் பழக்கங்கள் நோய்க ளாகி
      முத்தமிழர் இனம்தன்னை அழித்த போது
காடாகி மூலிகையாம் கவிதை யாலே
      கனித்தமிழர் இனம்காத்த கனக சுப்பன்!

சாதிமதப் பேய்களுக்கு எதிராய் நின்றான்
      சவக்குழியைத் தோண்டிஅதைப் புதைப்போ மென்றான்!
பாதிவழிப் பயணத்தில் துணைஇ ழந்த
      பாவையர்க்கு மறுவாழ்வை அமைப்போ மென்றான்!
நீதிவழிக் காதலுக்குத் தடைகள் செய்யும்
      நீசருக்கு எரிமலையாம் இவரின் தோற்றம்!
நாதியற்ற இனம்போல தமிழர் வீழ்ந்தார்
      நடுவழியில் இவன்பாட்டால் எழுந்து நின்றார்!

தான்கண்ட கனவுகளில் தானே யாகி
      எந்நாளோ கவிதைகளாய் எழுந்து நின்றான்!
வான்கண்ட பரிதிஎன வந்த மேலோன்
      வரலாற்றில் புதியதொரு உலக மானான்!
தேன்கொண்ட மலரிதயம்! மனித நேயம்
     திரண்டமனம் பேராழி! அன்பின் கங்கை!
மான்கொண்ட விழிமாதர் உரிமை பேசும்
     வரலாறாய் மீண்டுமவன் வரமாட் டானோ?

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above