தமிழ்ப்படைப்பாளிகளை ஒருங்கிணைத்து இதழ் நடத்துவ து சுலபான செயலல்ல. அதுவும்
கவிஞர்களை ஒருங்கிணைப்பது சொல்லவே தேவையில்லை. இப்படிப்பட்ட சூழலிலும்
கவிதையின் வளர்ச்சியில் அக்கறையுடைய சிலரால் அங்கொன்றும் இங்கொன்றுமாக
கவிதையிதழ்கள் நடத்தப்பட்டு வருகின்ற சூழலில்
கவிஞர் அறிவுமதியால்
இப்போது தொடங்கப்பட்டுள்ள கவிதைக்கான இதழ் 'தை'. இலக்கிய மற்றும்
கவிதையிதழ்கள் எல்லோருக்குமாக இயங்கிய சூழல்கள் மாறி தனி குழுவுக்கான
திட்டங்களோடு செயல்படுகிற சிக்கலான நிலைமை தமிழகத்தில் வளர்ந்து விட்டது. |