"நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்"

நுழைவாயில்

கதை
  நியாயங்கள்
  சூப்பர் ஹிட் வெள்ளி
  வாக்குமூலங்கள்
  சுண்ணாம்பு
  பூவும் வேரும்
கவிதை
  பாசக்கடல்
  விதி
  சுடர்க தமிழ்நெஞ்சம்
  மூன்றாம் காதல்
கட்டுரை
  பாபருக்கும், இராமருக்கும்...
 அனிச்ச மலர்
நேர்க்காணல்
  க்ருஷாங்கினி
நட்சத்திர ஆல்பம்
திரையோவியம்
காலண்டர் 2006
Difficulty reading Tamil Text?
எங்களுடன் தொடர்புகளுக்கு...
தமிழில் சுலபமாக எழுத! 
யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்ய
 

 

அம்மா! என் ஆசை அம்மா!
அனிச்ச மலர்


- பினேல் ஹேமலதா

நான் கஷ்டப்படும் போது விதிப்பயன் என்று விட்டு விடலாம். என்னுடைய ஒரு துளி கண்ணீரைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அம்மா எனதாசை அம்மா.

எனது முக வேறுபாட்டைக் கண்டவுடன் வாடிடும் அனிச்ச மலரல்லவோ அம்மா எனதாசை அம்மா.

தனது உடலைக் கொத்தி தன் இரத்தத்தை உணவாக தன் குஞ்சுகளுக்கு தரும் அன்றில் பறவை போல் தன் வாழ்க்கையை தியாகம் செய்தவளல்லவோ அம்மா எனதாசை அம்மா.
ஆயிரம் தவறுகள் செய்தாலும் அடிக்காமல் அன்பு காட்டி அகிம்சை வழி வந்த அண்ணல் காந்தி போல் பொறுமையின் பூமியல்லவா அம்மா எனதாசை அம்மா.

நான் சிரித்தால் சிரிக்கும், அழுதால் அழும் கண்ணாடி போல் வாழ்க்கையின் இலட்சியமே தன் மக்கள்தான் என்று நினைப்பவளல்லவா அம்மா எனதாசை அம்மா.

நாவடக்கம், களவாமை, கீழ்படிதல் போன்ற நற்பண்புகளை - உலகப் பொதுமறை திருக்குறள் போல் நடந்து காட்டி போதித்த ஆசிரியையல்லவா அம்மா எனதாசை அம்மா.

இதயத்தில் இருப்பதை புரிந்து எழுதும் கரம் போல புரிந்து செயல்படும் நற் தோழியல்லவா அம்மா எனதாசை அம்மா.
பக்கங்கள் போதாது அம்மாவின் சிறப்பைச் சொல்ல...

இப்போது நானும் ஒரு தாய். அவளைப் போல - என் தாயைப் போல என்னாலும் நல்லதை கற்பிக்க இயலும் என நம்புபவளே இந்த புதிய அம்மா.

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above