துன்பக் கடலினிலே - நான்
துயர்படும் வேளையிலே!
இன்பமென வருவாள் - என்
எண்ணத்திலே நிறைவாள்!
பாலில் சுவைசேர்த்தே - என்னைப்
பாரடா கண்ணாவென்பாள்!
நூலில் இழைபோல - அவள்
நுண்ணிய அறிவுடையாள்!
பாசக் கடலினிலே - எனக்கொரு
பங்கினை அளித்திடுவாள்!
பாசக் கடலவளே - என்றும்
பளிங்கினும் வெண்மனத்தாள்!
துயர்படும் வேளையிலே!
இன்பமென வருவாள் - என்
எண்ணத்திலே நிறைவாள்!
பாலில் சுவைசேர்த்தே - என்னைப்
பாரடா கண்ணாவென்பாள்!
நூலில் இழைபோல - அவள்
நுண்ணிய அறிவுடையாள்!
பாசக் கடலினிலே - எனக்கொரு
பங்கினை அளித்திடுவாள்!
பாசக் கடலவளே - என்றும்
பளிங்கினும் வெண்மனத்தாள்!
