|
பெர்னாட்ஷா
எழுதிய நாடக மொன்றில் ...
கார்னீலியா என்ற நடிகை மிகவும் பிரமாதமாக நடித்தார்.
ஷாவினால் அதை வாய்விட்டுப் பாராட்டாமல் இருக்க
முடியவில்லை.
"… அற்புதம்,
பிரமாதம் "
என்றார்.
" …அவ்வளவு
புகழ்ச்சிக்கு நான் தகுதியில்லாதவள் "
என்று நடிகை அடக்கமாகச் சொன்னார்.
" …நான்
நாடகத்தைச் சொன்னேன் "
என்று சமாளித்தார் ஷா.
உடனே நடிகையும் " …நானும்
அதைத்தான் சொன்னேன் "
என்றார். ஷா
அதற்கு மேல் ஏதும் பேசவில்லை.
-
அ.பேச்சியப்பன்,
ராஜபாளையம்.
இந்தியாவிற்கு
தெனாலி ராமன் எப்படியோ..
அதுபோல,
அரேபியா விற்கு முல்லா,
துருக்கி நாட்டிற்கு ஹோஜா.
ஒருநாள் ஹோஜா
தன் வீட்டு மாடியில் அமர்ந்து படித்துக் கொண் டிருந்தார்.
யாரோ வாசல் கதவை தட்டும் சத்தம் கேட்டது. உடனே சிரமத்துடன்
மாடியிலிருந்து இறங்கி வந்து கதவைத் திறந்தார் ஹோஜா
.
" . …மிகவும்
பசியாக இருக்கிறது. ஏதாவது தர்மம் செய்யுங்கள் "
என
பிச்சைக்காரன் ஒருவன் கேட்டான்.
அவனை மாடிக்கு அழைத்துச் சென்றார். நாற்காலியில் உட்கார
வைத்தார். பின்னர் அமைதியாக " …பிச்சை
போட முடியாது... போய் வா "
என்றார்.
" …இந்த
பதிலை சொல்லவா என்னை மாடி ஏறி வரச் செய்தீர்கள் "
என முனகினான் பிச்சைக்காரன்.
" …நீ
மட்டும் பிச்சை கேட்க என்னை மாடியிலிருந்து அழைக்க
வில்லையா? "
என
ஆவேசத்துடன் கேட்டாராம் ஹோஜா.
-
எஸ்.பக்கிரிசாமி,
திருவாரூர்.
ஜான்
ரூபி என்பவர்அமெரிக்க தத்துவ மேதை.
ஒருநாள் தன் நண்பருடன் சென்றுகொண்டிருந்தார். எதிரே வந்த
ஒரு சிறுவன் " ……பள்ளிக்கு
கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு டாலர் இருந்தால் கொடுங்கள் "
என்று கேட்டான்.
பணத்தைக் கொடுத்து அவனை அனுப்பிய ரூபி,
தன் நண்பரிடம் குறைபட்டுக் கொண்டார். " ……இந்த
ஊரிலேயே பெரிய தொல்லை இதுதான். வழியிலே போற
சிறுவர்களெல்லாம் என்னிடம் பணம் கேட்கிறார்கள் "
என்றார்.
" ……
இப்போது பணம் கேட்டவன் உங்கள் மகனல்லவா? "
என்றார் நண்பர்.
ஜான் ரூபி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்.
அப்போதுதான் அவருக்கு ஞாபகம் வந்தது. ஏனென்றால் ரூபி ஞாபக
மறதிக்காரர்.
-
ப.கந்தசாமி,
திருச்செங்கோடு.
உள்ளங்கையில்
ஏன் முடி முளைக்கவில்லை?
" ……என்
உள்ளங்கையில் ஏன் முடி முளைக்கவில்லை? "
என
பீர்பாலிடம் கேட்டார் அக்பர்.
" ……நீங்கள்
வாரி
வாரி
வழங்குவதால் கையில் முளைக்கவில்லை "
என்றார் பீர்பால்.
" ……சரி...
உன் கையில் ஏன் முளைக்கவில்லை? "
என்றார்.
" ……நீங்கள்
தருவதை வாங்கிக்கொண்டே இருப்பதால் முளைக்கவில்லை "
என்றார் சாமர்த்தியமாக.
" ……சரி...
இவர்கள் கையில் ஏன் முளைக்கவில்லை? "
என்று எதிரே இருந்தவர்களை காட்டிக் கேட்டார்.
உடனே பீர்பால், " ……நமக்குக்
கொடுக்கவில்லையே என்று பொறாமையால் கைகளைப் பிசைவதால்
முளைக்கவில்லை "
என்றதும்,
பீர்பாலின் சாமர்த்தியத்தை பாராட்டினாராம் அக்பர்.
-
ஜெ.அன்பு பாலாஜி,
திருச்சி-2 |