|
வண்டுகடி பூ நிற
மதிப்பெண் அட்டை
நீட்டி
"
கையெழுத்து வாங்கிட்டு
வரச்சொன்னாங்க சாரு
"
அழுக்குடன்
வெய்யிலில் கிடந்ததால்
மடமடத்து நிற்கும்
பாவாடை கசக்கி
நிற்பேன்.
"எதுக்குத்தா
..
இதுல என்ன போட்டிருக்காக?
"
"நான்
எவ்வளவு
மார்க் வாங்கியிருக்கேன்னு
போட்டிருக்காங்க
"
"ஆமா
..
அதாம் நமக்குப்
படியளக்கப் போவுது..
கோட்டையில பொண்ணுபொறந்தாலும்
போட்ட புள்ளி
தப்பாதுனு
எங்கிட்டுப் போயி இழுபடப் போவுதோ
..
அங்கிட்டு வீசிட்டு
ஆவுற
சோலியப் பாப்பியளா
"
கொல்லையிலிருந்து
முள் நறுக்கிக்கொண்டு
கத்தும்
அம்மா
"
நீ கையெழுத்துப் போட்டா நேரமாயிரும்
மை தடவுறேன்
...
ரேக
வையுப்பா
"
"
நான் என்ன கையெழுத்துப் போடத் தெரியாதவனா
?
கையெழுத்துப்
போட்டுத்தான் ஓட்டுகூட போட்டேன்
"
பேனா பதிப்பார்,
கலப்பை போல்
அழுத்தி...
அட்டை கிழிந்து அடி வாங்கும் பயத்தில்
துடிக்கும்
மனசு
உச்சி வெயிலில்
"
பட்"
டென வெடிக்கும்
உளுத்தம் நெத்தாய்
"சடக்"
கென முகம் நிமிர்த்தி
சந்தேகம் கேட்பார்
"
வழிவிட்டான் மவன்
சன்னாசின்னுதானத்தா
போடணும்
? "
"
வ போட்டு புள்ளி வச்சு
ஒம் பேர
எழுதுப்பா நேரமாவுது
"
"
அந்த சிலேட்டுப் பலகையை எடுத்து
எம்பேர
எழுதுத்தா
பாத்து பாத்து வெரசா எழுதிர்றேன்
"
மாடொன்றைத்
தவறவிட்டு
வந்து
பண்ணையார் முன் நிற்கும்
மேய்ப்பவராய்த்
தாழும் அவர் குரல்
"
இதுக்குத் தான் அப்பவே சொன்னேன்
ரேகை வையுன்னு
"
எழுதி வைக்கும்
பெயரைப்
பாத்து பாத்து எழுதிக் கொண்டிருக்கும் போது
போதாமல் போய்விடும்
இடம்
"
அடுத்த கோட்டுல மடிச்சி எழுதவா
"
அழுகை வந்துவிடும்
எனக்கு
"
அடுத்த பரிச்சைக்கித்தான்
அங்க எழுதணும்
"
அட்டையைப் பறித்துக்
கொண்டு
அவர் பெயரில் குறையும்
ஓரெழுத்தையோ
..
ரெண்டெழுத்தையோ
மதகில்
அமர்ந்து நானே எழுதி
"போன
தடவை மாதிரி
எல்லார்கிட்டயும் காட்டி
சொல்லிச்
சிரிக்காம இருக்கணுமே
சுப்ரமணிய சாரு
"
கவலையோடு நுழைவேன்
வகுப்பிற்குள்
o |