"நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்"

 கதை
  பிம்பம்
  மறதி
  சிலந்திவலை
  விடுதலை
கவிதை
  மனிதனை நினைத்தால்...
  புகலிடம் தாராயோ
  தமிழ்நெஞ்சம்
  அப்பாவின் கையெழுத்து
  முத்தான முத்துக்கள்
  கட்டுரை
  கற்பு
  கவிதாயினி மதுமிதா
  தொலைநோக்கு விகடன்
  சிரிக்க சிந்திக்க
  சிந்தித்தால் சிரிப்புவரும்
  சிரிப்பதற்காக அல்ல
  நூல்கள் அறிமுகம்
  நட்சத்திர ஆல்பம் 
  திரையோவியம்
  காலண்டர் 2006
.. Difficulty reading Tamil Text ?
.. Tamil Fonts
.. எங்களுடன் தொடர்புக்ளுக்கு...
.. தமிழில் சுலபமாக எழுத!
.. யுனிகோட் தமிழில் தட்டச்சு ...

சந்தனப்பேழை

01 - 2006

02 - 2006

03 - 2006

04 -2006

 

 

 

முத்தான முத்துக்கள்


தொழுது நம்தமிழ் என்றிடு!
பழுதில் நம்தமிழ் கற்றிடு!
எழுது நற்றமிழ் நாடொறும்!
வழுத்து வண்டமிழ் என்றுமே!
            - ச.திருநாவுக்கரசு, முசிரி


கனியைத் தேனோடு சேர்த்திடில்
இனிய நற்சுவை எய்தலாம்;
இனிய தேனினை நெய்யுடன்
இணைத்தா லேஅது நஞ்சுதான்!
            - த.முத்தமிழ், தருமபுரம்

உழைப்பு

சொந்த நிலமே யானாலும்
சோற்றுக்காக உழைத்திடனும்
பந்தம் உறவு வலுப்பெறவே
பாசத்துடனே பழகிடனும்
தங்கம் போல் விலைபெறவே
தகுதி நன்றாய் அமைந்திடனும்
விந்தை புரியும் உலகமிது
வினயத் துடனே வாழ்ந்திடனும்

கனி ஆமிரி


தமிழர் கூட்டம்

உலகம் எங்கும் படர்ந்த கூட்டம்
            தமிழர் கூட்டம் - என்றும்
ஒருமைப் பாட்டைப் போற்றிப் பேணும்
            புனிதக் கூட்டம்!

 அண்டை, மேலை நாடு தோறும்
            உழைக்கும் கூட்டம்! - என்றும்
அன்பு
, நேர்மை, வாய்மை போற்றி
            அணைக்கும் கூட்டம்!

 பண்டை அறநூல் நிறைவாய்த் தந்த
            மொழியின் கூட்டம்! - என்றும்
பசுமை யான இலக்கியங்கள்
            வழங்கும் கூட்டம்! 

-         கவிஞர் இமயபாரதி


 

அறிவோமே

பொன்னும் பொருளும் நிறைந்தாலும்
            போற்றும் அருளால் சிறந்தாலும்
மின்னும் கல்வி இல்லாரை
            மேன்மை யாக எண்ணாரே!

 எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
            ஏனைக் கலைகள் பொன்னாகும்!
மண்ணில் நன்றாய் வாழ்தற்கு
            வளரும் கல்வி பெறுவோமே! 

கல்வி அழகே அழகாகும்
            கற்க கற்க சுவையாகும்!
செல்வத் துள்ளே அழியாத
            செல்வம் அதுவே! அறிவோமே!

                           - கவிஞர் கி.பாரதிதாசன்    

 

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above