பிஞ்சு மனம்!
ஒருவர் நண்பர் வீட்டுக்குப் போனார்.
கதவைத் திறந்த சிறுமியிடம்...
"உன் அப்பா இருக்கிறாரா?" என்று கேட்க,
"இல்லை வெளியே போயிருக்கிறார். ஸாரி அங்கிள்" என்றாள்
சிறுமி.
உடனே இவர், "அப்பா இல்லையென்றால் பரவாயில்லை. அதற்கு நீ
ஏன் வீணாக ஸாரி சொல்கிறாய்?" என்று கனிவுடன் கேட்டார்.
"அதற்காக ஸாரி சொல்ல வில்லை அங்கிள். பொய் சொல்ல
வேண்டியிருக்கிறதே அதற்காகத்தான் ஸாரி சொன்னேன்" என்றாள்
சிறுமி.
ஜூனியர் ஜீஜீ
"எறும்புகள் எப்போதும் ஓய்வு
எடுப்பதேயில்லை. வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்புடன்
உழைத்துக் கொண்டேயிருக்கின்றது" என்று ஒரு சிறுவன் சொன்னான்.
அதைக் கேட்ட சர்தார்ஜி சிறுவன்,
" நீ சொல்வது தவறு. நான் ஒருமுறை ஊட்டிக்கு சுற்றுலா
சென்றிருந்தபோது அங்கே எறும்புகளைப் பார்த்திருக்கிறேன்.
அந்த எறும்புகள் ஓய்வு எடுக்கத்தானே ஊட்டிக்குச் உல்லாசப்
பயணம் வந்திருக்கும்?" என்றான் மேதாவித் தனமாக.
|