"நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்"

தமிழ்நெஞ்சம் - நுழைவாயில்

 கதை
  காத்திருத்தல்
  பரீட்சை நேரம்
  கடவுளின் பெயரால்
  நாக் அவுட் நாவன்னா
கவிதை
  மறவாதீர்
  வண்டமிழை வாழ்த்திடுவோம்
  நெஞ்சத்தில் வைத்துப் போற்று
  மஞ்சத்தின் பரிசு
  தரணி வாழ்த்திட வா
  மைக்காரி
  கட்டுரை
  ஆணவம் தந்த தண்டனை
  மூவகை மக்கள்
  கவிதாயினி இளம்பிறை
  ஜெயந்தி பேசுகிறேன்
  சிரிக்க சிந்திக்க
  சிந்திப்போம்
  அனுபவம் புதுமை
  நூல்கள் அறிமுகம்
  நட்சத்திர ஆல்பம் 
  திரையோவியம்
  காலண்டர் 2006
.. Difficulty reading Tamil Text ?
.. Tamil Fonts
.. எங்களுடன் தொடர்புகளுக்கு...
.. தமிழில் சுலபமாக எழுத!
.. யுனிகோட் தமிழில் தட்டச்சு ...
 

 

 

மஞ்சத்தின் பரிசு 


மாதொருபாகன்

வண்ணச் சேலைகட்டி வந்து நின்று,
தென்னந் தோப்பெல்லாம் தேடி விட்டு
,
பின்னல் சடையாடக் கோபங் கொண்டு
,
தன்னந் தனிமையாளாய் வந்து விட்டாள்.
 

வீட்டிலே வேறொருவன் இருக்கக் கண்டு,
பாட்டாலே பரவசத்தைக் காட்டி விட்டு
,
வேட்கையிலே பரிதவிக்கும் அவனைக் கண்டு
,
கூட்டிப்போய்ப் படுக்கையிலே இருக்க வைத்தாள்.
 

வேலோடு போட்டியிடும் விழி இமைத்து,
பாலோடு தேனைப் பருகக் கொடுத்து
,
தோலோடு தோல்சேர்க்கத் துடித்து வந்து
,
காலோடு கால்பின்னக் கட்டி அணைத்தாள்.


மிஞ்சிய அழகதனால் தடுமாறி வீழ்ந்து
,
பஞ்சனை படபடக்கப் பரவசத்தால் துடித்தவனை
,
பிஞ்சு கரத்தினால் நெஞ்சோடு அணைத்து
,
எஞ்சிய காசெல்லாம் கொஞ்சியே பெற்றாள்.

 

Copyright © 2006 TamilNenjam.com All right reserved
Best viewed IE 4 and above. Netscape 7.x, FireFox 0.8 and above.with resolutions 800x600 and above