|
கண்டும் காணாக் கண்மணியே -
போகும்
கார ணமென்ன பொன்மணியே !
வண்டு விழியே மோகினியே
- நீ
வாராய் அருகே மாங்கனியே !
மலரும் வண்டும் பேசுதடி -
என்
மனதில் காதல் வீசுதடி !
நிலவும் உனைக்கண்(டு)
ஏங்குதடி - உன்
நினைவால் ஆசை ஓங்குதடி !
சிரித்துப் பேசும் சிங்காரி -
என்
சிந்தை பறிக்கும் ஒய்யாரி
சுரிகு ழலுற்ற பூக்காரி -
விழி
சுழல மயக்கும் மைக்காரி! |