இளநெஞ்சம் எழுந்தோங்க
எழிற்கதிரோன் ஒளிக்கின்றான்!
வளமுடைய வண்டமிழை
வாழ்த்திடுவோம் தோழர்களே!
உழைக்கின்ற
வன்கைகள்
உயர்வுகளைப்
பெற்றிடவே
விழைந்தெழுந்து ஒற்றுமையாய்
வென்றிடுவோம்
தோழர்களே!
அலைபாயும்
கடல்தனிலே
அணையாத
விளக்காவோம்!
நிலையற்றோர் வாழ்ந்திடவே
நெறிபடைப்போம்
தோழர்களே!
பைந்தமிழில் ‘பா’புனைந்து
படைத்திடுவோம்
இன்னமுதை!
நந்தமிழின் நற்புகழை
நாட்டிடுவோம்
தோழர்களே!